கனிமொழி வெளியிடும் ரஜினி வரலாறு


சூப்பர் ஸ்டார் ரஜினியின் வாழ்க்கை வரலாற்றை தி நேம் இஸ் ரஜினிகாந்த் என்ற பெயரில் டாக்டர் காயத்ரி சில மாதங்களுக்கு முன் ஆங்கிலத்தில் வெளியிட்டார். இப்போது அதன் தமிழப் பதிப்பும் வெளியாகிறது.

ரஜினி பேரைக் கேட்டாலே... எனும் தலைப்பில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 30) வெளியாகும் இந்தப் புத்தகத்தை கனிமொழி எம்பி வெளியிடுகிறார். சவேரா ஓட்டல் சேர்மன் நீனா ரெட்டி பெற்றுக் கொள்கிறார்.

இந்த விழாவின் சிறப்பு விருந்தினர்களாக, எழுத்தாளர் – கார்டூனிஸ்ட் மதன் மற்றும் இயக்குநர் எஸ்பி முத்துராமன் பங்கேற்கின்றனர். இந்த விழாவில் ரஜினிக்கு நெருக்கமான இன்னும் சில விவிஐபிக்களும் கடைசி நேரத்தில் பங்கேற்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது! ரஜினி மகள் சவுந்தர்யாவும் இதில் பங்கேற்கிறார்.
விழாவை இறைவணக்கம் பாடித் துவக்கி வைக்கிறார் விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர்இந்தப் புத்தகத்தின் ஆங்கிலப் புத்தகத்தில் இருந்த பல சம்பவப் பிழைகள் மற்றும் எழுத்துப் பிழைகள் நீக்கப்பட்டு, முழுமையாக வெளியிடப்படுவதாக டாக்டர் காயத்ரி தெரிவித்துள்ளார்.

0 comments: