SS only looking for cooperation from authorities






whats wrong if he say sorry...to all jathi veriyan be a human 1st....whateva rajini never ask sorry he just looking for cooperation from authorities to release the movie.....


தமிழ் படங்கள் கர்நாடகத்தில் தடையில்லாமல் வெளியாவதற்காக தன்னுடைய புகழை துச்சுமாக நினைத்து சூப்பர் ஸ்டார் விடுத்த வேண்டுகோளுக்கு தமிழ் சினிமாவுலகம் ஆதரவை தெரிவித்துள்ளது.

தயாரிப்பாளர்களும், படத்தோடு சம்பந்தப்பட்டவர்களும் எந்த விதத்தி்லும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தன்னையை துச்சமாக நினைத்து ரஜினி எடுத்த முயற்சிகள் போற்றுதலுக்குரியது என்று இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் தெரிவித்திருக்கிறார்.

ரஜினிகாந்த் வருத்தம்தான் தெரிவித்திருக்கிறார். மன்னிப்பு கேட்கவில்லை. தயாரிப்பாளர்கள், முதலீட்டாளர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதாலும், கர்நாடகத்தில் உள்ள அவருடைய ரசிகர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவும் பரந்த மனப்பான்மையுடன் அவர் வருத்தம் தெரிவித்து இருக்கிறார் என்று பாராட்டியிருக்கிறார் பாரதிராஜா.

தயாரிப்பாளர் கலைப்புலி சேகரன் கூறுகையில், தனிப்பட்ட முறையிலோ, தனி மனிதராகவோ அவர் மன்னிப்பு கேட்கவில்லை. தயாரிப்பாளர், விநியோகஸ்தர், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோர் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக தொழில் ரீதியாக அவர் வருத்தம் தெரிவித்திருப்பதில் நியாயம் உள்ளது. இதைக் கண்டிப்பது சரியல்ல என்று கூறியிருக்கிறார்.

இதைத்தொடர்ந்து தமிழ் திரையுலகின் முக்கிய பிரபலங்கள் கர்நாடகா விஷயத்தில் ரஜினியின் செயல்பாட்டை பாராட்டியிருக்கிறார்கள்.

குசேலனை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று கன்னட அமைப்புகள் இரண்டு வாரங்களாகவே மிரட்டி வந்தன. தமிழ் திரையுலகமோ பலத்த மௌனம் சாதித்து வந்தது. 30 ஆண்டுகளாக தமிழ் திரையுலகை வாழ வைத்துக்கொண்டிருக்கும் ரஜினி சம்பநத்ப்ட்ட படத்திற்கு பிரச்னை வந்தபோது வாய் திறக்காமலிருந்த தமிழ் திரையுலகத்தினர் ரஜினியே முன்வந்து பேசியதும் வெளிப்படையாக பேச ஆரம்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

0 comments: