SuperStar TV

சூப்பர் ஸ்டார் ரஜினி குடும்பத்திலிருந்து புதிதாக ஒரு டிவி வரப் போகிறதாம். சூப்பர்ஸ்டார் டிவி என்று அதற்குப் பெயரிடப் போகிறார்களாம்.



முன்பெல்லாம் பத்திரிக்கைகள் தொடங்குவது ஃபேஷனாக இருந்தது. இப்போது டிவி ஆரம்பிப்பதுதான் தமிழ்நாட்டில் லேட்டஸ்ட் ஃபேஷனாகியுள்ளது.

சமீபத்தில் திமுகவிலிருந்து கலைஞர் டிவி பிறந்தது. காங்கிரஸ்காரர்களான தங்கபாலு, வசந்தகுமார் ஆகியோரும் டிவி ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிலையில் திரையுலகிலிருந்து ஒரு புதிய டிவி வரப் போகிறது. ரஜினியின் இளைய மகள் செளந்தர்யாதான் அந்த டிவியை ஆரம்பிக்கப் போகிறவர்.

கிராபிக்ஸ் டிசைனரான செளந்தர்யா, தற்போது ஆக்கர் ஸ்டுடியோஸ் என்ற ஸ்டுடியோவை ஆரம்பித்து நிர்வகித்து வருகிறார். இந்த நிலையில், புதிதாக ஒரு டிவியை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளார் செளந்தர்யா. சூப்பர் ஸ்டார் டிவி என்று இப்போதைக்கு அதற்குப் பெயரும் சூட்டியுள்ளாராம்.

ரஜினியை வைத்து சுல்தான் தி வாரியர் என்ற அனிமேஷன் படத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் செளந்தர்யா. விரைவில் உலகெங்கும் இது திரைக்கு வருகிறது.

இந்த நிலையில், நேஷனல் ஜியாகிரபி அல்லது டிஸ்கவரி ஆகிய உலகின் முன்னணி சேனல்களுடன் இணைந்து சூப்பர் ஸ்டார் டிவியை தொடங்கத் திட்டமிட்டுள்ளார் செளந்தர்யா.

முதலில் இதற்கு ரஜினி ஒப்புதல் தரவில்லையாம். வேண்டாமே என்று கூறியுள்ளார். ஆனால் செளந்தர்யா, நைஸாக பேசி தந்தையின் ஒப்புதலை வாங்கி விட்டாராம்.

இது வழக்கமான டிவியாக இருக்காதாம். படு வித்தியாசமான சானலாக இருக்கும் என செளந்தர்யாவை அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

இதுகுறித்து செளந்தர்யாவிடம் கேட்டதற்கு, இப்போதைக்கு எதுவும் சொல்வதற்கில்லை என்று கூறி நழுவி விட்டார்.

0 comments: