Sivaji 100th Day in America

அமெரிக்க கண்ட வரலாற்றிலேயே முதல் முறையாக, ஒரு தமிழ்ப் படம் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்துள்ளது. அந்தப் படம் சிவாஜி என்று சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை.இந்தியாவிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய பட்ஜெட்டுடன், மிகப் பெரிய எதிர்பார்ப்புடன், வெளியான ஒரே படம் சிவாஜியாகத்தான் இருக்க முடியும்.

வெளியாகி 100 நாட்கள் ஆனதே தெரியவில்லை. அந்த அளவுக்கு படு வேகமாக சிவாஜி 100 நாட்களைத் தாண்டியுள்ளது.

40 நாடுகளில் 800க்கும் மேற்பட்ட பிரிண்டுகளுடன் வெளியான படம் சிவாஜி. அமெரிக்கா மற்றும் கனடாவில் தமிழ் சிவாஜி 44 மையங்களில் திரையிடப்பட்டது. இதுவரை இப்படி ஒரு படம் இங்கு திரையிடப்பட்டதில்லையாம். இது ஒரு சாதனை.

இங்கிலாந்தில், யுகே டாப் 10 பட வரிசையில் முதன் முதலாக ஒரு தமிழ்ப் படம் இடம் பெற்ற பெருமையை சிவாஜி நிகழ்த்தியது. இது இன்னொரு சாதனை.

இப்போது உலகெங்கிலும் சிவாஜி 100 நாட்ளைக் கடந்துள்ளது. கனடாவில் மட்டும் 6 தியேட்டர்களில் திரையிடப்பட்டது. தற்போது ஸ்கேர்பாரோவில் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது. இதுதவிர மேலும் 5 தியேட்டர்களில் சிவாஜி திரையிடப்பட்டு ஓடிக் கொண்டிருக்கிறது.

டொரண்டோவில் ஒரு தமிழ்ப் படம் 100 நாட்களாக ஓடிக் கொண்டிருப்பது இதுவரை இல்லாத புதிய சாதனையாம். இது சிவாஜியின் மாபெரும் சாதனை.

சிவாஜி படத்தின் உலகளாவிய விநியோகஸ்தரான அய்ங்கரண் இன்டர்நேஷனல் நிறுவனம் கூறுகையில், இலங்கையில் 12 தியேட்டர்களில் சிவாஜி தொடரந்து அரங்கு நிறைந்த காட்சிளாக ஓடிக் கொண்டிருக்கிறதாம். சிங்கப்பூரில் 2 தியேட்டர்களில் 100 நாட்களைக் கடந்துள்ளதாம்.

ஏவி.எம் நிறுவன தலைமை செயல் அதிகாரி எஸ்.சி.பாபு கூறுகையில், தமிழகத்தில் 90 தியேட்டர்களில் சிவாஜி 100 நாட்களைத் தொட்டுள்ளது. சென்னையில் மட்டும் 10 தியேட்டர்களிலும் புறநகர்களில் 13 தியேட்டர்களிலும் 100 நாட்களைத் தொட்டுள்ளது என்றார்.

இதுதவிர பெங்களூரில் சிவாஜி 3 தியேட்டர்ளில் 100 நாள் ஓடியுள்ளது. மைசூரில் ஒரு தியேட்டரில் 100 நாட்களைத் தொட்டுள்ளது. மும்பையில் உள்ள அரோரா சினிமாஹாலில் சிவாஜி நாளையுடன் 100 நாட்களைத் தொடுகிறது.

ஏவிஎம் நிறுவன விளம்பரப் பொறுப்பாளர் அர்ஜூனன் கூறுகையில், உலகம் முழுவதும் சிவாஜி படம் 100 நாட்களைத் தொடுவது குறித்து மேலும் செய்திகளை எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

0 comments: