The Robo Music Director Wins the Oscar

Local Fans And foreign Fans of Rahman

Rahman fans Pray at chennai temples



''எல்லாப் புகழும் இறைவனுக்கே'': ஆஸ்கர் மேடையில் தமிழில் பேசிய ரஹ்மான்

ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருமே ரஹ்மானுக்கு தங்கள் இதயப் பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். இருவரும் ரஹ்மானுக்கு போன் செய்து தங்கள் சந்தோஷத்தையும், வாழ்த்துக்களையும் கூறினர். ஒவ்வொரு தமிழருக்கும், இந்தியருக்கும் பெருமை சேர்த்துவிட்டார் ரஹ்மான் என ரஜினி கூறியுள்ளார்.

Poem For Rahman Ji

ரோஜாவில் பூத்த ராஜாவே
உங்கள் இசையோடு
புலம்பெயாந்த
ஈழத் தமிழனின் வாழ்த்துக்கள்.

நூறு கோடி
இசைத் தொகுப்புகளால்
உங்கள் முகம்
உலகமெங்கும் விரிகிறது.

இசைக்கு மொழியில்லை என்று
உங்கள் இசையே
உலகுக்கு புரிய வைத்தது
இசைக்கு ஏது எல்லையென்று
உலக விருதுகளே
உங்களைத் தேடி வருகிறது.

ராஜாவின் இசைத் தாலாட்டில்
நாங்கள் நனைந்தாலும்
உங்கள் இசைகேட்டபோது தான்
துள்ளிக் குதித்து எழுந்தோம்.

தாயகத்தைப் பிரிந்து
நாங்கள் குளிர்க்கூடுகளில் வாழ்ந்தாலும்
உங்கள் இசையே
எங்கள் வீடுகளில் ஊர்வலம் போகிறது.

நீங்கள் மீட்டுகிற
கறுப்பு வெள்ளைக் கட்டைகள்
அது ஏழு கட்டையோ
அல்லது எட்டுக்கட்டையோ
உங்கள் இசை கேட்டால்
இதயம் மகிழ்கிறது.

அங்கே கொத்துக் கொத்தாய்
எம் மக்கள் அழிந்து போக
இங்கே தமிழ் வானொலிகளில்
"எந்தன் தேசத்தின் குரல்…"
பாடல்
உ(எ)ங்கள் குரலாய் தினம் ஒலிக்கிறது.

கன்னத்தில் முத்தமிட்டால்
திரைப்படத்திற்கு பல
விமர்சனங்கள் இருந்தாலும்
"விடை கொடு எங்கள் நாடே"
என்ற பாடல்
எங்கள் தாலாட்டாய் ஆனது.

சன்னங்கள் வெடித்துச் சிதற
எங்கள் தேசமே சிவக்கிறது
குருதி பெருகி வழியும்
நெஞ்சுக்குழிகள் காக்க
பதுங்கு குழிகளிலும்
உங்கள் இசை கேட்கிறோம்.

எங்கள் கண்ணிர் துளிகள்
காய்ந்து போக
உங்கள் இசைத் துளிகள்
மயிலிறகாய் மனம் தடவுகிறது.

பாரதிராஜாவின்
தாஜமகால் திரைப்படத்திற்கு
நீங்கள் இசையமைத்திருக்கலாம்
ஆனால் இனி
தாஜமகாலே பார்த்து அதிசயிக்கும்
உலக அதிசயமாய் நீங்கள்.

எங்கள் செவிவழி
இதயம் எங்கும் நிறைந்த
இசையப் புயலே
உங்கள் அடக்கமான வார்த்தைகளால்
எல்லாப் புகழையும்
இறைவன் உங்களுக்கே சேர்த்துள்ளார்.

உங்கள் இசைப் பாதையில்
எத்தனை முட்களை கடந்து
நீங்கள் ஒரு ரோஜாவில் மலர்ந்தீர்கள்.
எங்கள் விடுதலைப் பாதையில்
ஆயிரம் முதலைகளை கடந்து
நாங்களும் மீண்டும் மலர்வோம்.

இசை உலகில் உங்களுக்கு
கிடைத்த இந்த அங்கிகாரம்
எங்கள் தேசத்திற்கும்
ஒரு நாள் கிடைக்கும்
அன்று உங்களைச் சந்திப்போம்

இசையால்
உலகை வென்றவர் நீங்கள்
வாழ்க உங்கள் குடும்பம்
தொடரட்டும் உங்கள் இசைப்பய
ணம்!


81வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 6.00 மணிக்குத் தொடங்கியது.

இதில், ரஹ்மானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான (ஒரிஜினல் ஸ்கோர்) ஆஸ்கர் விருது மற்றும் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருது ('ஜெய் ஹோ') வழங்கப்பட்டது.

விருதைப் பெற்ற பின் ரஹமான் பேசுகையில்,

நான் இங்கு ஒருவித அச்சத்துடனும் அதே நேரத்தில் பெரும் மகிழ்ச்சியுடனும் வந்தேன். ஏதோ என் திருமணத்துக்கு வருவது போல படபடப்பாய் இருந்தது. இந்த விருதுக்குக் காரணம் என் தாயின் ஆசிர்வாதம். எனக்கு என் தாயைத் தவிர வேறு எதுவும் பெரிதில்லை. இந்த அரங்கில் அவரும் அமர்ந்திருக்கிறார். அவருக்கு நன்றி, அவரது ஆசிர்வாதத்துக்கு நன்றி. விருது வழங்கிய அகாடெமிக்கும் என் நன்றிகள்.

எனது இசைக் கலைஞர்கள், இந்தப் படத்தில் பணியாற்றியவர்கள் அனைவருக்கும் நன்றி. இந்த வாய்ப்பைத் தந்த இயக்குனர் போய்ல், மும்பைக்கும் நன்றி.

இந்தப் படத்தின் மையக் கருத்தே நம்பிக்கை தான். என் வாழ்நாள் முழுவதும் எனக்கு அன்பு செலுத்தவும், பகைத்துக் கொள்ளவும் வாய்ப்புகள் கிடைத்தன். நான் அன்பையே தேர்வு செய்தேன். கடவுள் நம்மோடு இருக்கையில் நமக்கு எல்லாம் கிடைக்கும்.

இந்த விருதை என் தாயகமான இந்தியாவுக்கு அர்ப்பணிக்கிறேன் என்ற ரஹ்மான், நான் தமிழில் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன் என்று கூறிவிட்டு,

''எல்லாப் புகழும் இறைவனுக்கே'' என்று ஆஸ்கர் மேடையில் தமிழில் பேசி தனது தமிழ் பற்றையும் காட்டினார்.

பின்னர் இந்திய தொலைக்காட்சி நிருபர்களிடம் பேசிய ரஹ்மான், என் சொந்த ஊரில் (சென்னை) உள்ள உங்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி, இந்த விருதை இந்தியாவுக்கு சமர்பிக்கிறேன் என்றார் தமிழில்.

0 comments: