ரஜினி ரஜினிதான் !


வயிறார சோறு போடுவதற்கு சமம், வாயார புகழ்வதும்!

சமீபத்தில் சில படங்களை பார்த்துவிட்டு அதில் சம்பந்தப்பட்ட அத்தனை பேரையும் அழைத்து பாராட்டியதோடு, தனது சார்பாக மோதிரங்களையும் பரிசளித்து மகிழ்ந்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

வேறு யாராவது நடிகர்கள் இப்படி செய்திருக்கிறார்களா என்று யோசித்து பார்த்தால், சமீபகாலங்களாக ஒருவரும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கும். இப்படி இவர்களை அழைத்து பாராட்டுவதால் ரஜினிக்கு என்ன லாபம்? ஒன்றுமேயில்லை! ஆனாலும், பாராட்டுகிற மனசு மற்றவர்களுக்கும் வர வேண்டும் என்பதை சொல்லாமல் உணர்த்தியிருக்கிறாரோ என்னவோ?

நான் கடவுளை பொறுத்தவரை இன்னுமொரு ஆச்சர்யம். படத்தின் இயக்குனர் பாலா, மற்றும் ஆர்யா, பூஜா ஆகியோரை பாராட்டுவதில் ஒன்றும் ஆச்சர்யம் இல்லை. அந்த படத்தில் நடித்த ராஜேந்திரநாத் (முரட்டு மீசையுடன் போலீஸ் அதிகாரியாக வருவாரே) என்பவரையும் அழைத்து முக்கால் மணி நேரத்திற்கும் மேலாக பாராட்டினாராம்!

முன்னணி நடிகர்களே..., ரஜினியின் நாற்காலிக்கு ஆசைப்பட்டால் மட்டும் போதாது. பாராட்டுகிற விஷயத்திலும் ரஜினியாக இருக்க வேண்டும்!

0 comments: