அனைவரையும் மதிப்பதில் ரஜினிக்கு நிகர் யாருமே இல்லை
Linked by
MoDeStOrEaN
on Saturday, February 14, 2009
'நான் கடவுள்' படத்தின் தாக்கத்திலிருந்து ரஜினியால் இன்னமும் மீள முடியவில்லை போலிருக்கிறது. படத்தைப் பார்த்துவிட்டு அதில் கதாநாயகனாக நடித்த ஆர்யாவையும் இயக்குநர் பாலாவையும் நேரில் அழைத்து பாராட்டினார்.
இந்தப் படம் தன்னை ஒரு தமிழ் நடிகனாக பெருமை கொள்ள வைத்திருப்பதாகக் கூறினார் ரஜினி.
தற்போது அப்படத்தில் பார்வை இழந்த பெண்ணாக பிச்சை எடுக்கும் கேரக்டரில் நடித்த பூஜாவையும் வீட்டுக்கு அழைத்து, அவரது நடிப்பைப் பாராட்டி பரிசளித்துள்ளார் ரஜினி.
ரஜினியை சந்தித்த அனுபவம் பற்றி பூஜா நிருபர்களிடம் கூறியதாவது:
நான் கடவுள் படத்தின் மொத்தக் குழுவையுமே ரஜினி சார் வெகுவாகப் பாராட்டினார்.
பாலா சார், ஆர்யா எல்லாம் ரஜினி சாரைப் பார்த்தப்பவே, எனக்கும் ஒரு வாழ்த்து பூங்கொத்து அனுப்பியிருந்தார். ஆனால் அன்று நான் ஊரில் இல்லை. வீட்டுக்கு வந்து பார்த்தால், ரஜினி சார் அனுப்பிய பூங்கொத்து இருந்தது. எனக்கு மகிழ்ச்சியில் தலை கால் புரியவில்லை. உடனே ரஜினி சாருக்கு போன் செய்தேன்.
என்னுடைய அதிர்ஷ்டம், எந்திரன் படப்பிடிப்பு கேன்ஸலாகி ரஜினி சார் வீட்டிலேயே இருந்தார். உடனே அப்பாயிண்ட்மெண்ட் கிடைத்துவிட்டது.
சுமார் ஒரு மணிநேரம் ரஜினி சார் குடும்பத்துடன் இருந்தேன். எளிமை, அன்பு, அடுத்தவர்களைப் பாராட்டு ஊக்கப்படுத்துதல் எல்லாவற்றையுமே ரஜினி சார்கிட்டருந்து கத்துக்கணும். அப்பக்கூட அவர் மாதிரி அன்பாக நடந்துக்க முடியுமா தெரியல…
எனக்கு ஒரு ராகவேந்திரர் படமும், ஒரு சால்வையும் பரிசாகக் கொடுத்தார் ரஜினி சார்.
இதைவிட வேற விருதும் பாராட்டும்கூட எனக்குத் தேவையில்ல. என் திரையுலக வாழ்க்கை முழுமை பெற்ற மாதிரி சந்தோஷமாக இருக்கு.
விரைவில் என் குடுபம்த்தோட ரஜினி சாரைப் பார்க்கப் போறேன். இன்னும்கூட, என் பெற்றோரால ரஜினி என்னை நேரில் கூப்பிட்டு வாழ்த்தியதை நம்ப முடியல.
'கண்கலங்கிய ரஜினி…'
படத்தின் இறுதிக் காட்சியில் நான் பேசிய வசனங்களைக் கேட்டு தன்னையும் அறியாமல் கண்கலங்கிவிட்டதாகக் குறிப்பிட்டார் ரஜினி சார். அவர் இதைச் சொன்னபோது, எனக்கு கண்கள் கலங்கிவிட்டன, மகிழ்ச்சியில்.
எல்லாப் புகழும் ஆண்டவனுக்கே என்பதுபோல, என்னுடைய இந்த எல்லாப் புகழும் பாலா சாருக்கே சேரும்.
நான் சொந்தக் குரலில் பேசியதை ரொம்ப பாராட்டினார், புதுப் படங்கள் ஒப்புக்கும்போது, கேர்புல்லா இருக்கணும்னு சொல்லியிருக்கார். நிச்சயம் அவர் சொன்னபடி நடப்பேன்…", என்றார் பூஜா நிறைவாக.
0 comments:
Post a Comment