ஆஹா... ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ?

கடமையைச் செய்; பலனை எதிர்பார்! – இப்படி ரஜினி சொன்னது தவறு எனக் கூறிக்கொண்டு சில வெத்து வேட்டுப் பேர்வழிகள் இலவச விளம்பரத்துக்கு கால் பிறாண்ட ஆரம்பித்திருக்கிறார்கள்...

இப்போதெல்லாம் ரஜினி என்ன பேசினாலும் அதற்கு ஒரு தப்பர்த்தம் கண்டுபிடித்து போராட்டம் நடத்துவதற்கென்றே ஒரு கும்பல் அலைந்து கொண்டிருக்கிறது,
அவர் எப்போதடா வாய் திறப்பார்... ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று எதையாவது சொல்லி இலவச பப்ளிசிட்டி தேடலாம் என சின்ன மனிதர்கள் தொடங்கி, பெரிய மனிதர்கள் போர்வையில் உலாவரும் சின்ன புத்திக்காரர்கள் வரை காத்துக் கிடக்கிறார்கள்.

ரஜினி அடுத்து பேசுவதற்கு எப்படியும் இன்னும் சில நாட்கள் ஆகும். காரணம் எந்திரன் ஷூட்டிங் பிஸி.. அதுவரைக்கு இவர்களால் சும்மா இருக்க முடியாதே...

என்ன பண்ணலாம்? ஆங்... அவரோட பழைய பட பஞ்ச் டயலாக்குகள் - சீன்களை எடுத்துச் சொல்லி சீன் போடலாமே... பொழப்பு ஓடணுமே பொதுமக்களே...!
சும்மா... சில சாம்பிள் பாக்கறீங்களா...

சிவாஜி: சும்மா அதிருதுல்ல...

- ஜியாலஜிஸ்டுகள் எனப்படும் மண்ணியல் ஆராய்ச்சியாளர்கள் அல்லது நில நடுக்க ஆராய்ச்சியாளர்கள் இனி ரஜினியுடன் மல்லுக்கட்ட ஆரம்பிக்கலாம், அதிருவதைக் கண்டுபிடிச்சு சொல்ல நாங்க இருக்கும்போது இவரு எப்படி அதைச் சொல்லலாம்னு!

சந்திரமுகி: யாமிருக்க பயமேன்; சரவணனிருக்க பயமேன்...

- இதுக்காக வேற யார் தகராறு பண்ணப் போறாங்க... அந்தப் பழனியாண்டவன் பக்தர்கள்தான். இந்த டயலாக்கை இனி ரஜினி தவிர்த்து யார் வேண்டுமானாலும் பேசலாம் என்று தடை விதிக்கக் கோரி அவர்களும் கிளம்பலாம்...

பாபா: நான் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன்...

-நேரத்தின் மதிப்பு தெரியாமல், மாணவர்கள் லேட்டா வருவதை நியாயப்படுத்த முயல்கிறார் ரஜினி, என்று பள்ளி நிர்வாகிகள் வேண்டுமானால் கொளுத்திப் போட்டுப் பார்க்கலாமே!

படையப்பா: என் வழி, தனி வழி....

- ‘ஆஹா... தனி வழியா... அதை எப்படி அனுமதிக்க முடியும். அப்புறம் நாங்க எதுக்கு நெடுச்சாலை, ரயில்வே, விமான வழி, கடல் வழி எல்லாம் வச்சிருக்கோம். அதெல்லாம் முடியாது... ரஜினி இந்த மூணு வழிகளைத்தான் யூஸ் பண்ணனும், தனி வழிக்கு அனுமதிக்க மாட்டோம்’னு நெடுஞ்சாலைத்துறை, ரயில்வே, விமானப் பணியாளர்கள் பெயரில் கொஞ்சம் பேர் கிளம்பி விடலாமே!!

பாபா: அசந்தா அடிக்கிறது உங்க பாலிஸி; அசராம அடிக்கிறது இந்த பாபா பாலிஸி!

-ரஜினி வன்முறையைத் தூண்டுகிறார், அசராம நிறைய பேரை அடிச்சி ஊனமாக்கிட்டார்னு கூட சில சங்கங்கள் முயற்சித்துப் பார்க்கலாம்...

அருணாச்சம்: ஆண்டவன் சொல்றான், அருணாச்சலம் செய்றான்!

-அப்ப... நாங்கள்லாம் எதுக்கு இருக்கோம். ஆண்டவன்கிட்ட இவர் நேரடியா காண்டாக்ட் வச்சிக்கிட்டு எங்க பொழப்பைக் கெடுக்கிறார்னு பூசாரிகள், அர்ச்சகர்கள் கொடி பிடிக்கலாம்!!

பாட்ஷா: நான் ஒரு தடவ சொன்னா நூறு முறை சொன்ன மாதிரி!

-நாட்டில் உள்ள கணக்கு வல்லுநர்கள் எல்லாம் கூட்டுப் போராட்டம் அறிவிக்கலாம்... ‘அது எப்படி ரஜினி ஒரு முறை சொன்னா நூறுமுறையாகும்... இது தப்புக் கணக்கு.. நாங்க ஒத்துக்கமாட்டோம். போராட்டம்... போராட்டம்... ரஜினி மன்னிப்புக் கேட்கும் வரை போராட்டம்...’

அய்யோ... தாங்க முடியலடா சாமி... நாட்ல இந்த சங்கங்களோட தொல்ல நிஜமாவே தாங்க முடியலடா சாமி! 'நாராயணா'... இந்த கொசுக்கள ஒழிக்க ஒரு வழி சொல்லேம்பா...!!

-சங்கநாதன்

1 comments:

Anonymous said...

http://crysredto.la2host.ru/05-2009.htm marin ca attorney goodrich bankruptcy http://lauknowhet.la2host.ru/upravlenie-buldozerom.htm ritz camera bankruptcy http://izomid.la2host.ru/pagesto_134.htm plano bankruptcy attorney http://tasnona.la2host.ru/62-gerosio.html us bankruptcy laws http://samocon.la2host.ru/03-2009.html bankruptcy of our nation http://corfidow.la2host.ru/02-2009.html colorado springs colorado bankruptcy cases http://lauknowhet.la2host.ru/buldozer-dt.htm check bankruptcy register uk http://netpnichen.la2host.ru/41-gerosio.html bankruptcy jeff levin michigan http://densrecan.la2host.ru/pagesto_36.htm washington state courts on bankruptcy
http://densrecan.la2host.ru/04-2009.htm iceland bankruptcy http://izomid.la2host.ru/pogruzchik-to-28.htm law firms forced into bankruptcy http://netpnichen.la2host.ru/igrushka-betonomeshalka.html alberta bankruptcy