மதுரை--Pattaya Kelappum Fans




இலங்கைத் தமிழர்களின் துயரத்தில் பங்கு பெறும் வகையில் பிறந்த நாள் கொண்டாட்டம் வேண்டாம் என்று ரஜினிகாந்த் அறிவித்துள்ளதால், டிசம்பர் 12ம் தேதி அவரது பிறந்த நாளன்று, இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதம் இருக்க மதுரை ரஜினி ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர்.
மேலும் போரால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு உணவு, மருந்து, உடைகள் உள்ளிட்ட நிவாரண உதவிப் பொருட்களை சேகரித்து அனுப்பும் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
இது குறித்து ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளான ரபீக், பாண்டியன், பால தம்புராஜ், சோலைராஜா ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஈழத்தமிழர்கள் போரால் பாதிக்கப் பட்டிருப்பதால் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் இந்த ஆண்டு தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார். அவரது வேண்டுகோளை நாங்கள் முழுவதுமாக ஏற்கிறோம்.


அதனை செயல்படுத்தும் வகையில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து சூப்பர் ஸ்டார் பிறந்த நாளான டிசம்பர் 12ந் தேதி உண்ணா விரதம் இருக்க மதுரை மாவட்ட ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர்.
அத்துடன் போரால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு உணவு, மருந்து, உடைகள் போன்ற நிவாரண உதவி பொருட்களை சேகரித்து அனுப்பும் நடவடிக்கையிலும் ஈடுபட ரஜினி மன்ற நிர்வாகிகளாகிய நாங்கள் முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்தனர்.


FlashBack:When Sivaji Audio Release,Madurai Fans welcoming the Audio CD.


0 comments: