வா தலைவா !



தமிழ் நாடு மட்டுமல்ல, தென்னிந்தியாவையே திரும்பி பார்க்க வைத்திருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு இது.

பா.ஜ.க. தலைவரும் வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான பா.ஜ.க.வின் பிரதம மந்திரி வேட்பாளருமான எல்.கே.அத்வானி, அரசியல் ஞானி ரஜினியை அவரது வீட்டிற்க்கே சென்று சந்தித்தது தான் அது. இந்த சந்திப்பின் பின்னணி குறித்து கேள்விப்பட்டால், புரியும் உங்களுக்கு சூப்பர் ஸ்டாரின் மகிமை பற்றி.

பா.ஜ.க. தலைவர் “என் தேசம், என் வாழ்கை” என்ற தனது சுய சரிதையை நாடு முழுதும் பிரபலங்களை வைத்து அந்தந்த பிராந்திய மொழிகளில் வெளியிட்டு வருகிறார். தமிழில் இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழாவை நடத்த தீர்மானித்து நீண்ட நாட்களுக்கு முன்பே அதற்கான ஏற்பாடுகளை செய்துவந்தனர்.

தயங்கிய ரஜினி
பா.ஜ.க. அபிமானியும் பிரபல பத்திரிக்கையாசிரருமான துக்ளக் ஆசிரயர் சோ, ரஜினியையும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள வைப்பதற்கு பகீரத பிரயத்தனம் செய்தார். அரசியல் சம்பந்தப்பட்ட ஒரு பிரபலத்துடன் இன்றைய சூழ்நிலையில் மேடையில் தோன்றுவதை விரும்பாத ரஜினி அது குறித்து பதில் எதுவும் கூறாமல் பிடிகொடுக்காமலே இருந்து
பறந்து வந்த சத்ருகன் சின்ஹா. பிடி கொடுக்காத ரஜினி

இந்த நிலையில், புத்தக வெளியீட்டு தேதியும் நெருங்க, ரஜினியை கன்வின்ஸ் செய்து புத்தக வெளியீட்டு விழாவிற்கு வரவழைக்க பிரபல நடிகரும் ரஜினியின் நெருங்கிய நண்பருமான சத்ருகன் சின்ஹாவை அனுப்பியது பா.ஜ.க. மேலிடம். அவரும் வந்து ரஜினியை சந்தித்து பேசினார். அவரிடம் அனைத்து விஷயங்களையும் நண்பர் என்கின்ற முறையில் மனம்விட்டு பேசிய ரஜினி புத்ததக வெளியீட்டு விழாவிற்கு மட்டும் வரமுடியாது என்று மறுத்துவிட்டார் என்று கூறப்படுகிறது.

அத்வானியிடம் கூறப்பட்ட ரஜினியின் பெருமைகள்
இந்நிலையில் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள இன்று சென்னை வந்தார் எல்.கே.அத்வானி. எப்படியும் ரஜினியையும் அத்வானியையும் ஒரே மேடையிலேற்றிவிடவேண்டும் என்று விரும்பிய இருவருக்கும் பொதுவானவர்கள் சிலர், அத்வானியிடம் நீங்கள் ரஜினியை நேரில் சென்று அழைத்தால் அவர் வரக்கூடும். தமிழக மக்களின் குறிப்பாக இளைஞர்களின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் அவர். அவரை அவரது வீட்டிற்கே சென்று சந்திக்கலாம். அவர் வந்து உங்கள் நூலை வெளியிட்டால் அது இன்னும் சிறப்பு பெரும் என்று எடுத்து சொல்ல,
அது அத்வானிக்கு சரியெனப்பட்டது. மேலும் நீண்ட நாட்களாக ரஜினி அவரை தமது வீட்டிற்க்கு வருமாறு அழைத்துக்கொண்டிருந்ததால் அத்வானி அதற்க்கு உடனே ஒப்புக்கொண்டார்.

உங்கள் வீட்டிற்கு அத்வானியுடன் வந்துகொண்டிருக்கிறோம் என்று சூப்பர் ஸ்டாருக்கு தெரிவித்து விட்டு, நேராக அவர் வீட்டிற்க்கே சென்றனர் விழாக்குழுவினர்.

ரஜினி வீட்டில் அத்வானி

சரியாக மாலை 5 மணிக்கு அத்வானியின் கார் ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டிற்க்கு சென்றது. அவருடன் இல.கணேசன், துக்ளக் ஆசிரியர் சோ, மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் ஆகியோர் சென்றனர். அத்வானி மற்றும் அவருடன் வந்தவர்களை தனது மனைவியுடன் எதிர்கொண்டு இன்முகத்தோடு வரவேற்றார் ரஜினி.

“தற்போதைய கவனம் எந்திரனில் மட்டுமே” - நழுவிய ரஜினி

ரஜினி வீட்டில் சுமார் அரை மணிநேரம் இருந்த திரு.அத்வானி பொதுவான அரசியல் சூழல் மற்றும் தமிழக நிலவரம் குறித்து அவரிடம் பேசியதாக தெரிகிறது. மேலும் வரவிருக்கும் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ரஜினி ஆதரவளிக்கவேண்டும் என்று அத்வானி கேட்டுகொண்டதாக தெரிகிறது. அதுமட்டுமன்றி மரியாதை நிமித்தமாக பா.ஜ.க.வில் சேரும்படி அவர் ரஜினிக்கு அழைப்பும் விடுத்தார். ஆனால் சூப்பர் ஸ்டார் தமது தற்போதைய கவனம் எந்திரனில் மட்டுமே இருப்பதாகவும், வேறு எதை பற்றியும் சிந்திப்பதற்க்கில்லை என்று நாசூக்காக அத்வானியின் வேண்டுகோளை மறுத்ததாக தெரிகிறது.

சந்திப்பு குறித்து திரு.அத்வானி கூறுவது என்ன?

ரஜினியுடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அத்வானி, “ஆண்டவன் கட்டளையிடும்போது நான் அரசியலுக்கு வருவேன்” என்று ரஜினி கூறுவது பாராட்டுக்குரியது. மேலும் அவர் நீண்ட நாட்களாக என்னை அவரது இல்லத்திற்கு வரும்படி அழைத்துவருகிறார். இன்று தான் அதற்க்கு சந்தர்ப்பம் அமைந்தது. எனக்கு அவரையும் அவருக்கு என்னையும் சந்திக்கவேண்டும் என்று நீண்ட நாள் ஆசை. இன்றைக்கு அது நிறைவேறியது. ரஜினியை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி” என்றார்.

நூலை வெளியிட இசைவு

சந்திப்பின்போது தனது புத்தக வெளியீட்டு விழாவிற்கு கண்டிப்பாக வரவேண்டும் என்று அத்வானி கேட்டுகொண்டதையடுத்து சூப்பர் ஸ்டார் அதற்க்கு மட்டும் சம்மதம் தெரிவித்தார்.

பின்னர் அன்று மாலை 6.30 மணிக்கு நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். சுயசரிதையின் தமிழ் பதிப்பை அத்வானி வெளியிட ரஜினி பெற்றுக்கொண்டார். (சூப்பர் ஸ்டார் விழாவில் பேசிய விபரங்களை இன்னும் கிடைக்கவில்லை. கிடைத்த பின்னர் அப்டேட் செய்யப்படும்.)

நடந்து இது தான்.

நாளிதழ்கள் கொடுக்கப்போகும் பில்டப்?

ஆனால், நம் தினசரிகள் இதற்க்கு கொடுக்கப்போகும் பில்டப் இருக்கிறதே… அப்பப்ப்பா…. ஒவ்வொரு நாளிதழும் எவ்வாறு தலைப்பிடும் என்று இப்போதே ஓரளவு யூகிக்க முடிகிறது…

பி.ஜே.பி.யில் சேர ரஜினி திட்டம்?

பா.ஜ.க.வில் ரஜினி?

ரஜினி - பா.ஜ.க கூட்டணி?

ரஜினியுடன் அத்வானி ரகசிய ஆலோசனை

பா.ஜ.க.வுக்கு ரஜினி ஆதரவு?

பா.ஜ.க.வுக்கு ரஜினி பிரச்சாரம்?

எதிர்க்கட்சி தலைவர் அதுவும் ஒரு கட்சியின் பிரதம மந்திரி வேட்பாளர் நம் சூப்பர் ஸ்டாரை தேடி வந்து அவரது இல்லத்தில் சந்தித்தது நமக்கு நிச்சயம் பெருமை தரக்கூடிய விஷயம்.

தேடி வந்த கெளரவம்

இப்படி ஒரு சந்திப்பு சூப்பர் ஸ்டாரின் வீட்டில் நடைபெறுவதாக சன்னில் பிளாஷ் செய்தி வந்தவுடன் நண்பர்கள் மொபைலில் எஸ்.எம்.எஸ்.கள் பறந்தன. எனக்கும் இது குறித்து எஸ்.எம்.எஸ். வந்தது. தொலைகாட்சி செய்திகளில் சூப்பர் ஸ்டாருடன் அத்வானியின் சந்திப்பு குறித்து முக்கியத்துவம் அளித்து கூறப்பட்டது. மொத்தத்தில் சூப்பர் ஸ்டார் என்றாலே பரபரப்பு என்பது மற்றொரு முறை நிரூபணமானது.

கட்சி ஆரம்பித்து ஸாரி கம்பெனி ஆரம்பித்து “கடை விரித்தேன் கொள்வாரில்லை” என்ற கணக்காய் ஒரு நடிகர் காத்திருக்க, இன்னொருவர் இப்படி ஒரு கட்சி தமிழ் நாட்டில் இருக்கிறதா, அதற்க்கு தலைவர் என்று ஒருவர் இருக்கிறாரா? என்று கேட்குமளவிற்கு இருக்க, சூப்பர் ஸ்டாரை தேடி வந்த இந்த கெளரவம், அண்மையில் ரசிகர் சந்திப்பில் ரஜினி கூறியதைத்தான் நினைவுபடுத்துகிறது. “அந்தஸ்த்தை தேடி நாம் போகக்கூடாது. அந்தஸ்த்து நம்மை தேடி வரவேண்டும்.”

நிஜமாகவே நாம் காலரை தூக்கிவிட்டுகொள்ளலாம்.

OnlyRajini.com

0 comments: