India's 50 - Most 'Power'



இந்தியாவின் 50 சக்தி வாய்ந்த பிரமுகர்களில் ஒருவராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்தியா டுடே இதழ், இந்தியாவின் டாப் 50 பிரமுகர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ரஜினிகாந்த்தின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

இந்திய அரசியல் மற்றும் அரசியல் அல்லாத துறைகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் குறித்த பட்டியல் இது.

இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள ரஜினிகாந்த், தென்னிந்திய திரைத் துறையில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக திகழ்கிறார். ரஜினிகாந்த் இல்லாமல், இந்திய சினி்மாத்துறை இல்லை என இந்தியா டுடே தெரிவித்துள்ளது.

முன்பு பல சந்தர்ப்பங்களில் ரஜினிகாந்த்தை இந்தியா டுடே விமர்சித்து கட்டுரைகளை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திரைத் துறையினரிடையே பெருந்தன்மையான மனதுக்குச் சொந்தக்காரராக ரஜினி விளங்குகிறார். பாபா, குசேலன் படங்கள் தோல்வி அடைந்தபோது விநியோகஸ்தர்களின் நஷ்டத்தைக் களைய பல கோடி ரூபாய்களை திருப்பிக் கொடுத்த அதிசய மனிதர் ரஜினி எனவும் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.

0 comments: