நடிகர் மோகன் பாபுவின் மூத்த மகன் திருமணம்


நடிகர் மோகன் பாபுவின் மூத்த மகன் விஷ்ணு மஞ்சு பாபுவுக்கும் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் சகோதரர் ஒய்.எஸ். சுதீகர் ரெட்டியின் மகள் விரானிகாவுக்கும் பிரமாண்டமான முறையில் திருமணம் நடந்தது.

விஷ்ணு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். விஷ்ணு- விரானிகா திருமணம் ஹைதராபாத்தில் உள்ள கச்சிபௌளி உள் விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது. சினிமா செட்கள் போல அமைத்து மிகப் பிரமாண்டமாக இத்திருமணம் நடத்தப்பட்டது.

இதில் ரஜினி, அவரது மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர். சிரஞ்சீவி, பவன் கல்யாண் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் இந்த திருமண விழாவில் பங்கேற்றனர்.

இசைஞானி இளையராஜா, இயக்குனர் பி.வாசு ஆகியோரும் மணமக்களை நேரில் வாழ்த்தினர். நடிகைகள் ஜெயசுதா, ஜெயபிரதா, ஜமுனா, ஜீவிதா, பிரியாமணி மற்றும் தாசரி நாராயணராவ், தெலுங்கு நடிகர்கள் கிருஷ்ணா, பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், பிரபாஸ், அல்லு அரவிந்த், உள்பட பலர் நேரில் வாழ்த்தினார்கள்.

முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குடும்பத்துடன் வந்து வாழ்த்தினார். கட்சி பாகுபாடுகளுக்கு அப்பால், அனைத்து தலைவர்களும் இந்த நிகழ்ச்சிக்கு வந்து மணமக்களை வாழ்த்தினர்.

0 comments: