RAJINI FANS WAITING FOR REAL CONFIRMATION

ரஜினியின் `சிவாஜி' படம் இந்தியா முழுவதும் சக்கை போடு போட்டது. வெளிநாடு களிலும் `டாப் 10' வரிசையில் வசூலை குவித்தது. சர்வதேச அளவில் இந்திப்படங்களை பின்னுக்கு தள்ளி அதிக விலை போன ஒரே தமிழ் படம் `சிவாஜி' தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியிலும் விரைவில் டப்பிங் ஆகிறது.

ரஜினி தற்போது அடுத்த படத்துக்கு தயாராகிறார். மணிரத்னம் அப்படத்தை இயக்குவது முடிவாகி விட் டது. `ஹிட்' படங்கள் கொடுத்த நிறைய டைரக்டர்கள் பெயரை பரிசீலித்து இறுதி யில் மணிரத்னத்தை தேர்வு செய்துள்ளார். தளபதி, நாயகன் சாயலில் கதையை உருவாக்குமாறு மணிரத்னத்திடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

`சிவாஜி'யின் உலகளாவிய வரவேற்பால் அடுத்த படம் பண்ணுவதில் எச்சரிக்கை யுடன் இருக்கிறார். சிவாஜிவை விட வலுவான கதையை தயார் செய்யுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார்.

தளபதி, நாயகன் படங்களை இயக்கியவர் மணிரத்னம். அழுத்தமான கதைக்கருவுடன் ஆக்ஷன் படங்களாக அவை உருவாக்கப்பட்டன. சினிமாத் தனத்தை மிஞ்சிய யதார்த்தங் கள் படத்தில் மிகுதியாக இருந்தன. அது போன்ற கதையில் நடித்தால் தான் சிவாஜியில் கிடைத்த புகழை தக்க வைக்க முடியும் என்று ரஜினி கருதுகிறார்.

கதை விவாதத்தில் மணிரத்னம் குழுவினர் இரவு பகலாக ஈடுபட்டுள்ளனர். ஓரிரு மாதங்களில் திரைக் கதை தயாராகி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு பாடல் பதிவு நடைபெற உள்ளது. சிவாஜியில் இசை யமைத்த ஏ.ஆர். ரகுமானே இப்படத்துக்கும் இசையமைப் பார் என தெரிகிறது.

ரஜினி ஜோடியாக இந்தி நடிகைகளில் ஒருவர் நடிக்க வாய்ப்புள்ளது. ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்க மணிரத்னம் விரும்புவதாக கூறப்படுகிறது. வித்யாபாலன், ஆயிஷா தாகியா பெயர் களும் பரிசீலிக்கப்படுகின்றன. அனைத்து வேலைகளையும் டிசம்பருக்குள் முடித்து விட்டு ஜனவரியில் படப்பிடிப்பை தொடங்குகின்றனர்.


source:www.maalaimalar.com
please visit thr for more info
thanks

0 comments: