மண் சோறு சாப்பிட்ட ரஜினி ரசிகர்கள்!


ரஜினி நடித்த சிவாஜி படம் வெற்றிகரமாக 100 நாட்கள் ஒடியதை முன்னிட்டு கரூரில் அவரது ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டனர்.
சமீபத்தில் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படம் வெற்றிகரமாக 100 நாட்கள் ஓடியது. இதற்காக விழா எடுக்க நினைத்த கரூர் மாவட்ட ரஜினி ரசிகர்கள் மன்ற நிர்வாகிகள் 100வது நாளில் மண் சோறு சாப்பிடுவதாக பல கோவில்களில் பிராத்தனை செய்துள்ளனர்.


அதன்படி கரூர் லட்சுமி ராம் தியேட்டரில் மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகிகள் டிசி மதன், குபேரன் ரமேஷ் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் குவிந்தனர். ரஜினியை வாழ்த்தி கோஷம் எழுப்பினர். ரஜியின் கட் அவுட்டிற்கு ஊதுபத்தி சூடம் காட்டி வழிபட்டனர். பெரிய மாலை அணிவித்தனர். கட்அவுட்டில் கால் படாதபடி ஏணி வைத்து ஏறி பால் அபிஷேகம் செய்தனர்.

ரஜினி மன்றத்திற்கு மாவட்ட தலைவர் ராஜா தலைமையில் கொடி அறிமுகம் செய்தனர். அப்போது வருங்கால முதல்வர் ரஜினி வாழ்க என கோஷம் எழுப்பினர்.

இதன் உச்சகட்டமாக ரஜினி நடித்த சிவாஜி படம் வெற்றிகரமாக 100 நாட்கள் ஒடியதை முன்னிட்டு அவரது ரசிகர்கள் கரூர் லட்சுமி ராம் தியேட்டரில் மண் சோறு சாப்பிட்டனர். மண் சோறு சாப்பிடுவதை பார்க்க அப்பகுதியில் மக்கள் கூட்டமாக குவிந்தனர்.
For more info about this please visit www.thatstamil.com(Best Tamil Cinema News)

0 comments: